சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு சி.ஐ.டியு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தர்மபுரி மண்டல பொதுச் செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை சி.ஐ.டி.யு. கிளை தலைவர் சுதாகர், செயலாளர் முகுந்தன் ஆகியோர் பணிமனை முன்பு நேற்று முன்தினம் சி.ஐ.டி.யு. பெயர் பலகையை திறந்து வைத்து வாயிற் கூட்டம் நடந்தது.
இதற்காக இருவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிகாலை 4 மணிக்கு வர வைத்து 11 மணிவரை அலைகழித்து பணி வழங்காமல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளை மேலாளர் உடனடியாக அவர்களை பணியில் அமர்த்தும் வரை வெளியே செல்ல மாட்டோம், எனக் கூறினர். இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பலர் கலந்து கொண்டனர். ரவி, பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story