17 வயது சிறுமி தற்கொலை முயற்சி: கணவர், மாமனார் போக்சோவில் கைது


17 வயது சிறுமி தற்கொலை முயற்சி: கணவர், மாமனார் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 11:21 PM IST (Updated: 1 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

17 வயது சிறுமி தற்கொலை முயற்சி விவகாரத்தில், அவருடைய கணவர், மாமனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்:
17 வயது சிறுமி
திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். அவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கும், கட்டிட தொழிலாளிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. 
இதில் மனமுடைந்த சிறுமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
சிறுமிக்கு 17 வயதே ஆவதால், திருமணம் நடந்தது தொடர்பாகவும், குழந்தை பிறந்தது தொடர்பாகவும் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். 
பின்னர் சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி, உடந்தையாக இருந்த அவருடைய தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் 17 வயது சிறுமியின் கணவர், மாமனார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story