ரவுடிகள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடிகள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 1 Jan 2022 11:30 PM IST (Updated: 1 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ரவுடிகள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரப்பகுதியில் ரவுடியிசத்தில் ஈடுபட்ட ரவுடி சரித்திர பதிவேட்டில் உள்ள சபரீஸ்வரனை (வயது22) போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல மச்சுவாடியை சேர்ந்த ஹரி என்கிற ஹரிஹரன் (25), அடப்பன் வயலை சேர்ந்த தினேஷ் என்கிற நெருப்பு தினேஷ் (22) ஆகியோர் ரவுடியிசத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கண்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டசிறையிலிருந்த சபரீஸ்வரன், ஹரி, தினேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான நகலில் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் 3 பேரையும் திருச்சி மத்தியசிறையில் அடைத்தனர்.
இதேபோல் அறந்தாங்கி சின்ன அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்ரீீதர் மகன் பாலநிகேதன் (20). ஆட்டோ டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன் பாலநிகேதனை கடத்தி சென்று சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் அடித்துக்கொலை செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அறந்தாங்கியை சேர்ந்த ஜான்முகமது மகன் அப்துல் லத்தீப் (19), ரஹமத்துல்லா மகன் அப்சல் முகமது (19) ஆகிய இருவரையும் அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர், அப்துல் லத்தீப், அப்சல் முகமது ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 

Next Story