அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 12:05 AM IST (Updated: 2 Jan 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

க.பரமத்தி, 
தென்னிலை அருகே உள்ள புளியம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கரூரிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தென்னிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே உள்ள லட்சுமிபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story