தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 2 Jan 2022 12:31 AM IST (Updated: 2 Jan 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


பொது சுகாதார வளாகம் வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் காலனியில் பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகரம்சீகூர் காலனியில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.

கூடுதல் ஆதார் மையம் அமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம்,  புதுக்கோட்டை தாலுகா  பழைய நகராட்சியில் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை சரிசெய்யும் வகையில் ஆதார் மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் 30 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றம் அடைகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதலாக ஆதார் மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

மரக்கிளைகள் அகற்றப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அவ்வைநகர் பகுதியில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மரங்கள் பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது அவை அருகில் உள்ள வீடுகளின் மீது முறிந்து விழுகின்றன. இதனால் அருகில் உள்ள வீடுகளின் சுற்றுச்சுவர்கள், தண்ணீர் குழாய்கள் உடைந்து சேதம் அடைகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீடுகளின் ஓரத்தில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அவ்வைநகர், பெரம்பலூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
திருச்சி ஏர்போர்ட் குளாப்பட்டி செல்லும் வழியில் உள்ள கலைஞர் நகரில் காலியாக உள்ள வீட்டு மனைகளில் இது நாள் வரை  மழை நீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும்  வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் அதில் கலந்து தெருவில் வருகிறது. மேலும் இரவு நேரத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இரவில் தூக்கம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும், கழிவுநீர் செல்வதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கலைஞர் நகர், திருச்சி. 

தேங்கும் மழைநீரால் கிராம மக்கள் அவதி 
அரியலூரில் இருந்து நொச்சிகுளம், புஜங்கராயநல்லூர், ஜெமீன் பேரையூர், கூடலூர் ஆகிய கிராமங்களுக்கு செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அரியலூர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து குறிஞ்சான்குளம் வழியாக செல்கிறது. இந்த தார்சாலையில் நொச்சிகுளம்-அரியலூர் இடையில் ரெயில்வே பாதை உள்ளதால் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அமைந்துள்ள தார் சாலையில் தான் மேற்படி கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், பள்ளிகல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் பல வருடங்களாக சென்று வருகின்றனர். ஆனால் மேற்படி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை பெய்தால் மழை தண்ணீர் வெளியில் செல்ல முடியாமல் தேங்கி குட்டை போல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாண்டிதுரை, புஜங்கராய நல்லூர், அரியலூர்.

கொசுக்களால் தூக்கத்தை இழக்கும் மக்கள் 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் கொசுக்கள் அதிக அளவில் காணப்படுவதால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் இரவு நேரத்தில் உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருவத்தூர், பெரம்பலூர். 

மயானத்திற்கு சாலை வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் ஆயிங்குடி தெற்கு  பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரே ஒரு மயானம் மட்டுமே உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் மழைபெய்யும்போது யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் உடல்களை கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆயிங்குடி, புதுக்கோட்டை. 

குளம்போல் தேங்கும் மழைநீர் 
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம்,  குணசீலம் ஊராட்சி கல்லூர் தெற்கு தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின் சாலைகளிலும்,  தாழ்வான பகுதிகளிலும் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கின்றன. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுப்பிரமணியன், கல்லூர், திருச்சி. 

ரெயில்வே சுரங்கப்பாதையை கடக்க முடியாமல் அவதி 
திருச்சி-ராமேஸ்வரம் ரெயில்வே பாதை திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் எப்போதும் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கிராப்பட்டி மற்றும் புதூருக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நசிருதீன். எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவில் முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது  ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பகவதிபுரம், திருச்சி. 

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு 
திருச்சி பீமநகரில் ஏராளமான தெருநாய்களும், கால்நடைகளும் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் நாய்களை கண்டதும் அச்சத்துடனே சாலையில் சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பீமநகர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தெரணிபாளையத்தில் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மண் சாலையானது மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனேவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தெரணிபாளையம், திருச்சி. 

பன்றிகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி கோட்டை  ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பன்றிகள் நிற்கிறது. மேலும் இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 



Next Story