திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன.
முருகபவனம்:
புத்தாண்டு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். மேலும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி பரிமாறிக்கொள்வார்கள். இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி திண்டுக்கல்லில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். வழிபாட்டு தலங்களுக்கு சென்று பொதுமக்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர். மேலும் புத்தாண்டு இனிதாக அமைய நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் சிலருக்கு புத்தாண்டில் பூரிப்பை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் பிறந்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணி வரை 5 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் என மொத்தம் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. புத்தாண்டில் தங்களுக்கு குழந்தைகள் பிறந்ததால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
Related Tags :
Next Story