தூய அலங்கார அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை


சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள்
x
சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள்
தினத்தந்தி 2 Jan 2022 12:35 AM IST (Updated: 2 Jan 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கும்பகோணம்:-

கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் பங்குத் தந்தை தேவதாஸ், மறைபணி நிலைய இயக்குனர், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் நோய்களில் இருந்து விடுபட வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 

தோமா ஆலயம்

கும்பகோணம் பேட்டை பாக்கியநாதன் தெருவில் உள்ள தூய தோமா ஆலயத்தில் போதகர் ஜெரின் சிஸ்டர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணிவரை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. 
அதேபோல் லுத்தரன் திருச்சபையில் போதகர் ஜான்சன் சாமுவேல் தலைமையிலும் சபை பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் ஸ்ரீராஜ் முன்னிலையிலும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் நாகர் நகர் ஒரே வழி ஏசு சபையிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story