நடுரோட்டில் சைக்கிளை போட்டு ரகளை செய்த வாலிபர்


நடுரோட்டில் சைக்கிளை போட்டு ரகளை செய்த வாலிபர்
x
தினத்தந்தி 2 Jan 2022 12:39 AM IST (Updated: 2 Jan 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மதுபோதையில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சைக்கிளை போட்டு ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வீடுகளிலேயே நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்றனர். நேற்று புத்தாண்டு தினத்தில் மதுபிரியர்களும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதற்கிடையே திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது குடித்தார். மது குடித்த உற்சாகத்தில் தனது சைக்கிளில் பஸ் நிலையம் அருகே ஏ.எம்.சி. சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது சைக்கிள் பெடல்களை மிதிக்க, மிதிக்க அவருக்கு மதுபோதை தலைக்கேறியது. இதனால் சைக்கிளை ஓட்ட முடியாமல் திணறிய அவர் நடுரோட்டில் சாய்த்து போட்டுவிட்டு அதில் அமர்ந்தார். பின்னர் அந்த வழியாக செல்பவர்களை அவதூறாக பேசிய வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் அவர் ரகளையில் ஈடுபட்டார். 
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரிடம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையைவிட்டு விலகி அமரும்படி கூறினர். ஆனால் அவர்களையும் வந்த வாலிபர் அவதூறாக பேச தொடங்கினார். இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் போதை ஆசாமியை சைக்கிளுடன் தரதரவென இழுத்து வந்து சாலையோரத்தில் வைத்தனர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. இந்த சம்பவம் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story