தாடிக்கொம்பு கோவிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
தாடிக்கொம்பு கோவிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் மர்மநபர் நகை பறித்து சென்றார்.
தாடிக்கொம்பு, ஜன.2-
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த அழகர்சாமி மகள் ஷர்மிளா (வயது 21). இவர் ஆங்கில புத்தாண்டையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, நேற்று அதிகாலை தனது சகோதரரான ராஜீவுடன் ஷர்மிளா தாடிக்கொம்புக்கு பஸ்சில் சென்றார்.
பஸ் நிலையத்தில் இருந்து அவர்கள் 2 பேரும் கோவில் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மர்மநபர் ஒருவர், ஷர்மிளா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஷர்மிளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர். தாடிக்கொம்பு கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story