வெடிவிபத்து நடந்த ஆலையில் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை


வெடிவிபத்து நடந்த ஆலையில் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2022 12:46 AM IST (Updated: 2 Jan 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் போலீஸ் டி.ஐ.ஜி. காமினி நேரில் விசாரணை மேற்ெகாண்டார்.

வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் போலீஸ் டி.ஐ.ஜி. காமினி நேரில் விசாரணை மேற்ெகாண்டார். 
டி.ஐ.ஜி. விசாரணை 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
 புத்தாண்டையொட்டி நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். 
போலீசார் விசாரணை 
மேலும் பட்டாசு ஆலையில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா.? அரசு விதிகளின்படி பட்டாசு ஆலை இயங்குகிறதா?  என பல்வேறு  கோணங்களில் விசாரணை நடத்தினர்.  பட்டாசு ஆலையில் வெடி விபத்தின் போது ஏற்பட்ட சத்தம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
பட்டாசு ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியனும் ஆய்வு ேமற்கொண்டார்.

Next Story