கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விருதுநகர்,
புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புத்தாண்டு விழா
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண அலங்கரிக்கப்பட்டிருந்தது. விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் அடிகளார், துணை பங்குத்தந்தை செபஸ்தியான் அடிகளார் தலைமையில் நன்றி வழிபாடுகளும் நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நள்ளிரவு புத்தாண்டு விழா திருப்பலி மறையுரை நடைபெற்றது.
விருதுநகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ்வெனிஸ் அடிகளார் தலைமையிலும், விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன்சேவியர் அடிகளார் தலைமையிலும், விருதுநகரில் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம்அடிகளார் தலைமையிலும் நன்றி வழிபாடுகளும் நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்ஸ்ஞானராஜ் அடிகளார், துணை பங்குத்தந்தை மரிய பென்சிகர் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் புனித ஏசுவின் திருஇருதய ஆலய பங்குத்தந்தை போதகர் மிக்கேல் ராஜ்அடிகளார் தலைமையிலும், ஒத்தையால் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தைஜெயராஜ் அடிகளார் தலைமையிலும் திருப்பலியும் மறை யுரையும் நடைபெற்றது.
நன்றி வழிபாடு
அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை சிப்ரியான் அடிகளார் தலைமையிலும், காரியாபட்டி தூய அன்னை ஆலயத்தில் பால்ராஜ் அடிகளார் தலைமையிலும், சிவகாசி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையிலும், மீனம்பட்டி புனித அன்னை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் தலைமையிலும் நன்றிவழிபாடு நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் புத்தாண்டு வழிபாடுகள் நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனியில் உள்ள தேவாலயம், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தேவாலயம், காளவாசல் தென்பொஸ்கோ சபை, தொம்ப குளம் தேவாலயம், டி.மேட்டூர் தேவாலயம், மேலாண்மறைநாடு தேவாலயம். ஆகிய ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Related Tags :
Next Story