ரூ.7 லட்சம் புகையிலை பறிமுதல்;2 பேர் கைது
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
புகையிலை பாக்கெட்
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 30) என்பவரை பரிசோதனை செய்தனர்.
அவரிடம் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் 3 பேர் சேர்ந்து வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அங்கு புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அவர் கூறிய வாடகை வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு மொத்தம் 49 மூடையில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
கைது
புகையிலை மூடைகளை பறிமுதல் செய்து போலீசார், கோவிந்தராைஜ கைது செய்தனர். மேலும் அதே சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ராஜபாளையம் சுரைக்காய்பட்டியை சேர்ந்த கார்த்திக் (33) என்பவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜபாளையம் ரோட்டில் வந்த சங்கரன்கோவிலில் சேர்ந்த சங்கர நாராயணன் (43) என்பவர் வந்து கொண்டு இருந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சங்கர நாராயணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story