‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:24 AM IST (Updated: 2 Jan 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

 சாலையில் தேங்கிய மழை நீர்

பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சியில் அக்கறை பூண்டி வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலைகள் நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது.  இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், கபிஸ்தலம்.

வேகத்தடையில் வெள்ளை கோடு வரைய வேண்டும்

பூதலூர் தாலுகாவில்  அகரப்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அய்யம்பேட்டை- தோகூர் சாலையில் பள்ளிக்கூட பஸ்நிறுத்தம் அருகே வேகத்தடை உள்ளது. இந்த சாலையில் அதிகஅளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த வேகத்தடை அடையாளம் காட்டும் வகையில் வெள்ளை கோடு வரையப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வானங்களில் வருவோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை கோடு வரையவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.                  
-பொதுமக்கள், பூதலூர்.

Next Story