24,431 பள்ளி மாணவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி
24,431 பள்ளி மாணவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பெரம்பலூர்:
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. அவர்களுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 51 தனியார் பள்ளிகள், ஒரு கேந்திரிய வித்யாலய பள்ளி என 150 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட தகுதியான மாணவ-மாணவிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பில் 8,370 பேருக்கும், 11-ம் வகுப்பில் 8,090 பேருக்கும், 12-ம் வகுப்பில் 7,971 பேருக்கும் என மொத்தம் 24,431 மாணவ, மாணவிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story