புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:54 AM IST (Updated: 2 Jan 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை 
மதுரை திருநகர், மாணிக்க நகர், அண்ணாதெரு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும். 
சிவசுப்பிரமணியன், மதுரை. 
குடிநீர் பிரச்சினை 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிங்கபுலியாபட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கமுதியிலிருந்து சிங்கபுலியாபட்டி வழியாக கோவிலாங்குளம் வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இருப்பினும் சிங்கபுலியாபட்டி கிராமத்திற்கு மட்டும் தண்ணீர் வசதி இல்லை. குடிநீர் பிரச்சினையால் மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
நாகநாதன், சிங்கபுலியாபட்டி. 
சாலையில் ஓடும் கழிவுநீர் 
‌‌மதுரை பொன்மேனிமாடக்குளம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் குளம் போல தேங்கி நிற்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாண்டியராஜன், மாடக்குளம். 
வாகன ஓட்டிகள் அவதி 
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாைலயை சீரமைப்பார்களா? 
கார்த்திக், ராமநாதபுரம். 
நாய்கள் அட்டகாசம் 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். வாகனங்களின் குறுக்கே நாய்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடையும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது. எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சங்கர், தேவகோட்டை. 
விபத்தை ஏற்படுத்தும் ஜல்லிக்கற்கள்
மதுரை எல்லீஸ்நகர் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஜல்லிக்கற்கள் சறுக்கி விடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும், வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி கற்கள் பறந்து சென்று நடந்து செல்லும் பொதுமக்களின் மீதும் விழுவதால் அவர்கள் காயம் அடைகின்றனர். எனவே, இந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். 
பொதுமக்கள், மதுரை.

Next Story