புத்தாண்டை ‘கேக்’ வெட்டி கொண்டாடிய போலீசார்
புத்தாண்டை ‘கேக்’ வெட்டி போலீசார் கொண்டாடினர்.
கொல்லங்கோடு,
ஆங்கில புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பொதுமக்களுக்கு பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2022 என்ற வடிவில் உருவாக்கப்பட்ட கேக்கை புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெட்ட முடிவு செய்திருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு குளச்சல் (பயிற்சி) துணை சூப்பிரண்டு சிந்து வந்தார். அவர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Related Tags :
Next Story