திருவட்டார் அருகே மரத்தடிகளை கொண்டு செல்ல முயன்ற லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
திருவட்டார் அருகே மரத்தடிகளை கொண்டு செல்ல முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவட்டார்,
திருவட்டார் அருகே மரத்தடிகளை கொண்டு செல்ல முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூவாற்று முகம்
திருவட்டார் அருகே கோதையார், பரளியார், தாமிரபரணி என 3 ஆறுகள் சங்கமமாகும் மூவாற்று முகத்தில் ஆண்டுதோறும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி மாத ஆராட்டு நடைபெறும். இந்த ஆற்றையொட்டி மூவாற்றுமுகம் கண்டன் சாஸ்தா கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் அருகில் இருந்து ஆற்றங்கரை வரை காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுவாமி ஆராட்டு முடிந்து பூஜைகள் நடத்துவதற்காக 2 பீடமும் கட்டப்பட்டிருந்தது.
ஆராட்டு தளம் சேதம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது. ஒப்பந்ததாரர் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மரத்தடிகளை வெட்டி அகற்றிய போது ஆராட்டு தளம், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
லாரி சிறைபிடிப்பு
பின்னர் மரத்தடிகளை ஏற்றி கொண்டு செல்ல முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது சேதமடைந்த தளத்தை சீரமைத்து தந்த பிறகு, லாரியில் உள்ள மரத்தடிகளை ஏற்றி செல்லலாம் என தெரிவித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட் டது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தளத்தை சீரமைத்து தந்தால் தான் லாரியை விடுவிப்போம் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர்.
2-வது நாளாக பேச்சுவார்த்தை
இந்த பிரச்சினை நேற்றும் நீடித்தது. தொடர்ந்து லாரியை விட பொதுமக்கள் மறுப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை.
இதுகுறித்து ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரன் கூறுகையில், ஆற்றூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட மூவாற்றுமுகம் பகுதியில் போடப்பட்டிருந்த தரைத்தளம் பாதிப்படைந்தது குறித்து தகவல் கிடைத்ததும் உடனே சென்று பார்வையிட்டேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story