தலைவாசல் அருகே வசிஷ்ட நதி தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை வசிஷ்ட நதி தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைவாசல்:
தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை வசிஷ்ட நதி தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வசிஷ்ட நதி
தலைவாசல் பகுதியில் வசிஷ்ட நதி ஓடுகிறது. கடந்த மாதம் நல்ல மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. வசிஷ்ட நதியில் பல இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. தண்ணீர் தேங்கி உள்ளன.
இந்த நிலையில் தலைவாசல் அடுத்துள்ள காட்டுக்கோட்டை வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் ஆய்வு நடத்த வரவில்லை என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
லட்சக்கணக்கான மீன்கள் திடீரென்று எப்படி செத்தன? என்பதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் வசிஷ்ட நதியையொட்டி உள்ள சேகோ ஆலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் தடுப்பணையில் கலந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story