சேலத்தில் பிரபல நகை கடையில் 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு-2 பெண்களுக்கு வலைவீச்சு


சேலத்தில் பிரபல நகை கடையில் 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு-2 பெண்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jan 2022 2:51 AM IST (Updated: 2 Jan 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பிரபல நகை கடையில் 5 பவுன் தங்க சங்கிலியை திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்:
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே பிரபல நகை கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம் 29-ந் தேதி 2 பெண்கள் நகை எடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் 5 பவுன் நகையை எடுப்பதாக கடை ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டு சிறிது நேரத்தில் எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கடை ஊழியர்கள் நகைகளை எடுத்து வைக்கும்போது, 5 பவுனில் இருந்த ஒரு தங்க சங்கிலி மட்டும் கருத்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், அந்த சங்கிலியை சோதனை செய்து பார்த்தபோது, அது கவரிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகை கடை நிர்வாகம் சார்பில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்தன்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து நகையை திருடி சென்ற பெண்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை வலைவீசி வருகின்றனர்.


Next Story