சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 27 குழந்தைகள் பிறந்தன


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 27 குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 2 Jan 2022 2:57 AM IST (Updated: 2 Jan 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 27 குழந்தைகள் பிறந்தன.

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 27 குழந்தைகள் பிறந்தன.
ஆங்கில புத்தாண்டு
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் 30 முதல் 35 குழந்தைகள் பிறக்கின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு 9 மணி வரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று 27 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் 14 ஆண் குழந்தை, 13 பெண் குழந்தைகள் என்று ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
பெற்றோர் மகிழ்ச்சி
புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் செவிலியர், டாக்டர் உள்ளிட்டவர்களுக்கு சாக்லெட், கேக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த குழந்தைகள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்தநாளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story