நெல்லையில் 3-வது நாளாக பரவலான மழை


நெல்லையில் 3-வது நாளாக பரவலான மழை
x
தினத்தந்தி 2 Jan 2022 3:27 AM IST (Updated: 2 Jan 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 3-வது நாளாக பரவலான மழை

நெல்லை:
நெல்லையில் 3-வது நாளாக நேற்று பரவலான மழை பெய்தது.
தொடர் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. நெல்லையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.
சேரன்மாதேவி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. மேலச்செவல், பத்தமடை, கங்கணாங்குளம், வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பரவலான மழை பெய்தது. 
தென்காசி மாவட்டத்திலும் நேற்று பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அணைகள்
கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பிய நிலையில் இருந்தன. அதேபோன்று நேற்றும் அந்த அணைகள் நிரம்பி இருந்தன. கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளிலும் தண்ணீர் அதிகமாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்பை-6, சேரன்மாதேவி-13, மணிமுத்தாறு-8, பாளையங்கோட்டை-14, பாபாநாசம்-7, நெல்லை-3.

Next Story