புத்தாண்டு கொண்டாட்டம்; ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை


புத்தாண்டு கொண்டாட்டம்; ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2022 3:31 AM IST (Updated: 2 Jan 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.

ஈரோடு
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.
மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான மது விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகமாக காணப் படுகிறது.எனவே பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மதுக்கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடைகளில் மது பிரியர்கள் குவிந்து தங்களுக்கு விருப்பமான மது வகைகளை அள்ளிச்செல்வதையும் காணமுடிந்தது.
ரூ.5¼ கோடி
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது விற்பனை தீவிரம் அடைந்தது.
 புத்தாண்டை வரவேற்கும் விதமாக மதுபிரியர்கள் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து    மது அருந்தினார்கள். நேற்று முன்தினம் காலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதில் இருந்தே மது விற்பனை மும்முரமாக காணப்பட்டது.
குறிப்பாக மாலை நேரங்களில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில்       ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story