புத்தாண்டை கொண்டாட சென்றபோது தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
புத்தாண்டை கொண்டாட சென்றபோது தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
தடுப்பு சுவரில் மோதல்
சென்னையை அடுத்த முட்டுக்காடு கரிகட்டுகுப்பம் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருடைய நண்பர் நரேஷ் (25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக முட்டுக்காட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
வாலிபர் பலி
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், 2 பேரையும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த நரேஷ், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story