மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் சாவு
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் இறந்துவிட்டார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 21). இவர், நேற்று முன்தினம் புத்தாண்டை கொண்டாட மது வாங்கி குடித்ததாகவும், அப்போது மதுவில் விஷம் கலந்து குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பிரவீன் இறந்துவிட்டார்.
ஆனால் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரவீன், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story