அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி நின்றமழை நீரால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அவதிக்குள்ளாயினர்.
உடுமலையில் மழை
உடுமலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன்படி நேற்று காலை 7மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 16.6 மி.மீ.மழை பதிவாகியிருந்தது. மழையினால் பல பகுதிகளில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கிநின்றது. இந்த நிலையில் உடுமலை வ.உ.சி. வீதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைத்தண்ணீர் பரவலாக தேங்கிநின்றது. குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் செல்லமுடியாமல் குளம் போன்று தேங்கி நின்றது.
அதனால் அரசு மருத்துவ மனைக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்கள், மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறவர்களை பார்ப்பதற்காக வந்த உறவினர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.
அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு ஆகிய பகுதிகளுக்கும் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. சிகிச்சை பெற வந்த நோயாளிகள், உள் நோயாளிகளைப்பார்ப்பதற்கு வந்த உறவினர்கள் மட்டுமல்லாது வார்டு பகுதிகளுக்கு செல்லும் மருத்துவ பணியாளர்களும் சிரமத்திற்குள்ளாயினர்.
அடைப்பு நீக்கம்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகராட்சி சுகாதார பணியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.அங்கு வ.உ.சி.வீதியில் அரசு மருத்துவ மனைக்கு முன்பு உள்ள பாதாள சாக்கடைத்திட்ட தொட்டியின் மூடியைத்திறந்து அடைப்பை நீக்கினர். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவ மனை வளாகத்தில் தேங்கியிருந்த மழைத்தண்ணீர் வடிந்தது.
Related Tags :
Next Story