தைப்பொங்கலை சிறப்பிக்கும் மண்பானை


தைப்பொங்கலை சிறப்பிக்கும் மண்பானை
x
தினத்தந்தி 2 Jan 2022 4:39 PM IST (Updated: 2 Jan 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

தைப்பொங்கலை சிறப்பிக்கும் மண்பானை

சேவூர் அருகே போத்தம்பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள். இவர்கள் 50 வருடங்களாக பாரம்பரிய தொழிலான மண்பாண்டம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்போது தை பொங்கல் வரும் நிலையில் அவரிடம் பொங்கல் பானை தயாரிப்பு குறித்து கேட்டபோது, குளத்திலிருந்து எடுக்கப்படும் செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை, வடிகட்டி, சேறு போல் தயாரித்து, நன்கு காலால் மிதித்து ஒரு நாள் ஊர வைத்து மறுநாள் மண்பாண்டம் செய்வேன். அடுப்பு, பூந்தொட்டி, சட்டி, பானை, சொப்பு, கலையம், கார்த்திகை விளக்கு, சாமி சிலைகள், குதிரை, பைரவர் சிலைகளை செய்து வருகிறேன். மண் பானை தயாரிக்கப்பட்டு பின்னர், உலர வைத்து, நெளிவுகள் மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது. அதற்குப்பிறகு, சூளையில் இட்டு, வேக வைத்து விற்பனைக்கு தயாராகிறது என தெரிவித்தார்.

Next Story