தேங்கி நிற்கும் கழிவுநீர்


தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 2 Jan 2022 4:41 PM IST (Updated: 2 Jan 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்
 தாராபுரம்  நகராட்சி சொக்கநாதபாளையம் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே  சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
வீணாகும் குடிநீர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் செல்லும் வழியில் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, கழிவுநீர் வாய்க்காலை தூர் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
போக்குவரத்திற்கு இடையூறு 
திருப்பூரில் உள்ள சாலைகளையும், தெருக்களையும் அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் போட்டிபோட்டு ஆக்கிரமித்து விட்டனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஆடுகளும், மாடுகளும் சாலைகளை அடைத்துக்கொள்கிறது. 
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காசிபாளையம் செல்லும் சாலையில் ஆடுகள் படுத்திருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.  எனவே கார்னர் பேக்கரி அருகில் படுத்து தூங்கும் ஆடு,மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

Next Story