விவசாய மின் இணைப்பு திருத்த சிறப்பு முகாம்
விவசாய மின் இணைப்பு திருத்த சிறப்பு முகாம்
பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
பல்லடம், தாராபுரம், காங்கேயம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் விவசாய மின் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்கள் விண்ணப்பங்களில் பெயர், சர்வே எண், முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்ய விவசாய மின் இணைப்பு சிறப்பு திருத்த முகாம் வருகிற 5ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
திருத்தம் செய்ய விரும்பும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரின் கிணறு, நில வரைபடம், உரிமைச் சான்று, பத்திர நகல், வாரிசுச் சான்று, மற்றும் கூட்டு உரிமையாளர்களாக இருந்தால் அவர்களது ஆட்சேபனையின்மை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
----
Related Tags :
Next Story