ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு


ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை  மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jan 2022 5:29 PM IST (Updated: 2 Jan 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி பழைய பஸ் நிலையத்தை புதுப்பித்து மாற்றி அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி நேற்று பழைய பஸ் நிலைய பணிகளை திடீரென ஆய்வு செய்தார். பின்னர் 3 வது மண்டலத்திற்குட்பட்ட கே.பி.என். காலனி பகுதியில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகளையும், அதை தொடர்ந்து 1 வது மண்டலத்திற்குட்பட்ட அங்கேரிபாளையம் பிரதான சாலை மற்றும் அங்கேரிபாளையம் சக்தி தியேட்டர் ரோட்டில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலைகளையும் கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக மேற்கொள்ளவும், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முன்னதாக நேற்று பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற 17 வது சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


Next Story