மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 2 Jan 2022 5:50 PM IST (Updated: 2 Jan 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கீழ கூட்டுடன்காட்டை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மகன் அருள்முருகன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் மாலையில் புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். 
அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு மாடு ரோட்டை கடந்து உள்ளது. இதில் நிலை தடுமாறிய அருள்முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அருள்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story