ஒமைக்ரான் தொற்று நீங்க சிறப்பு வழிபாடு


ஒமைக்ரான் தொற்று நீங்க சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2022 6:00 PM IST (Updated: 2 Jan 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் தொற்று நீங்க தூத்துக்குடி மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி திரு.வி.க. நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரசான ஓமைக்ரான் தொற்றில் இருந்து மக்களை காக்க‌ வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி 3 மணி நேரம் பெண்கள் 5 ஆயிரத்து 832 குரு போற்றி மந்திரங்கள் படித்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், கல்வி அறிவு மேலோங்கவும் வேண்டி சங்கல்பம் செய்து கருவறை அன்னைக்கு 1008 மந்திரங்கள் படித்து ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story