சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு வழிகாட்டி வரைபடம்


சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு வழிகாட்டி வரைபடம்
x
தினத்தந்தி 2 Jan 2022 7:14 PM IST (Updated: 2 Jan 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு போலீசார் வழிகாட்டி வரைபடம் வழங்கினர்.

கம்பம்:
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தேனி மாவட்டம் வழியாக குமுளி மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்  சென்று வருகின்றன. இந்நிலையில் குமுளி மலைப்பாதையில் வாகனநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கம்பம்மெட்டு மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அதன்படி கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக மந்திப்பாறை, புத்தடி, அனக்கரா, 1-ம் மைல், வண்டிப்பெரியார், பாம்பனார், பீர்மேடு, குட்டிக்கானம், முண்டகயம், எரிமேலி, பம்பை வழியாக சபரிமலைக்கு வாகனங்கள் செல்கின்றன. இதனிடையே இந்த வழியாக செல்லும் சில வாகனங்கள் வழிதெரியாமல் பாதை மாறி செல்கின்றன. இதனால் நேரம் விரயம், எரிபொருள் செலவு ஏற்படுகிறது.
இதையடுத்து சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு தேனியில் இருந்து சபரிமலை செல்வதற்கான வழித்தட வரைபடம் (ரூட் மேப்) வழங்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கம்பத்தில் கம்பம்மெட்டு பைபாஸ் பிரிவில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி வரைபடம் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கம்பம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதநேரு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story