கூடலூர் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்


கூடலூர் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2022 8:55 PM IST (Updated: 2 Jan 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

கூடலூர்

கூடலூர் பகுதியில் எந்திரங்கள் மூலம்  நெல் அறுவடை தொடங்கியது. 

நெல் சாகுபடி 

நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் கூடலூர், ஸ்ரீமதுரை, முதுமலை, தேவர்சோலை சுற்றுவட்டார கிராமங்களில் பல தலைமுறை களாக பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். 

இந்த பகுதியில் கந்தகசால், அடுக்கண், வெளும்பாலை, கோதண்டம், மர நெல், வாலி, முள்ளன் சண்னை உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. 

பின்னர் ஐப்பசி மாதம் பூ புத்தரி என்னும் நெற்கதிர்களை அறுவடை திருவிழாவை விவசாயிகள் கொண்டாடி வருவதுடன், அவற்றை குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். 

காலதாமதம்

அதன்படி சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாரானது. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்ததால், வரப்பு கள் சேறும் சகதியுமாக காணப்பட்டன. அத்துடன் அறுவடை எந்திரங் களும் வராததால் அறுவடை செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அவதியடைந்தனர். 

இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல்துறை அதிகாரிகள் அறுவடை எந்திரங்களை வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர். 

அறுவடை தொடக்கம்

இதையடுத்து நெல் அறுவடை பணி தொடங்கி உள்ளது. தற்போது கூடலூர் புத்தூர் வயல், கம்மாத்தி, பாடந்தொரை உள்பட பல இடங்களில் அறுவடை எந்திரங்கள் மூலம் நல்ல அறுவடை செய்யும் பணி தொடங்கப் பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story