81 ஆயிரம் பேருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி


81 ஆயிரம் பேருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 2 Jan 2022 8:59 PM IST (Updated: 2 Jan 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 81 ஆயிரம் சிறுவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 81 ஆயிரம் சிறுவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

81 ஆயிரம்

இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 330 பள்ளிக்கூடங்களில் சுமார் 81 ஆயிரம் சிறுவர்கள் உள்ளனர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், இந்த சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. 

மேலும் இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த பணியை கண்காணித்து தகுதி உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் 10 முதல் 12 நாட்களில் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story