கார் கவிழ்ந்து தொழில் அதிபர் உள்பட 3 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் சர்மா (வயது 65). அவருடைய மனைவி பாரதி (60), மகள் பிரன்யா (27). இவர்கள் 3 பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை சர்மா ஓட்டினார். பாரதியும், பிரன்யாவும் பின்னால் அமர்ந்து வந்தனர்.
அவர்கள் வந்த கார் நேற்று முன்தினம் இரவு கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கனவாய்மேடு பகுதியில் வந்துகொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற லாரியை சர்மா முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்பகுதியில் மோதியதுடன், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சர்மா, பாரதி, பிரன்யா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காரின் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story