அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 77 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 77 ஆயிரத்து 667 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திண்டுக்கல்:

77 ஆயிரத்து 667 மாணவர்கள்
ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் 15 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 148 உயர்நிலை பள்ளிகள், 241 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 389 அரசு, தனியார் பள்ளிகளில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் 77 ஆயிரத்து 667 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மருத்துவக்குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளன.
பள்ளி செல்லாத சிறுவர்கள்
அதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் 15 வயது நிரம்பிய மாணவர்களின் விவரங்களை சேகரிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி முகாமுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி செலுத்திய மாணவர்களின் விவரம், கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் பள்ளி செல்லாத சிறுவர், சிறுமிகளையும் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story