மகாமாரியம்மன் கோவில் திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 Jan 2022 9:53 PM IST (Updated: 2 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

நொய்யல், 
புகளூர் அருகே நாணப்பரப்பில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி கடந்த 31-ந்தேதி மகா மாரியம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து பாலத்துறை அருகே உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
நேற்று காலை கிடா வெட்டும், மதியம் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story