பாகலூர் அருகே தோழி ஊருக்கு சென்றதால் வேதனை இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பாகலூர் அருகே தோழி ஊருக்கு சென்றதால் வேதனை இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2022 4:34 PM GMT (Updated: 2022-01-02T22:04:59+05:30)

தோழி ஊருக்கு சென்றதால் வேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர்:
தோழி ஊருக்கு சென்றதால் வேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண்
ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சிகுமார் (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவி 2 பேரும் ஓசூர் தாலுகா, பாகலூர் அருகே சிச்சிருகானப்பள்ளியில் தங்கி இருந்தனர். விகாஷ்குமார் சிச்சிருகானப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மஞ்சிகுமாரின் தோழி ஜார்க்கண்டில் இருந்து பாகலூர் வந்தார். அங்கு சிச்சிருகானப்பள்ளியில் உள்ள மஞ்சிகுமாரின் வீட்டில் கடந்த 2 வாரங்களாக அவர் தங்கி இருந்தார். பின்னர் அவர் ஜார்க்கண்டிற்கு சென்று விட்டார். தோழியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத மஞ்சிகுமார் மனமுடைந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண் மஞ்சிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story