அமாவாசையையொட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு


அமாவாசையையொட்டி முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2022 10:07 PM IST (Updated: 2 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசையையொட்டி தர்மபுரி முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை விரிஞ்சிபுரம் ராமாயி, பொம்மாயி சமேத முனியப்பன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story