வாணியம்பாடி அருகே மினி லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி
மினி லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 46). இவர், தும்பேரி பகுதியைச் சேர்ந்த ராஜாவின் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று தும்பேரியை அடுத்த அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு கொடுத்திருந்த நாற்காலிகள், பந்தல் அமைக்க பயன்படுத்தும் இரும்புச் சாமான்களை ஏற்றி வருமாறு மினி லாரி வைத்திருக்கும் பாலாஜி என்பவரை ராஜா அனுப்பி வைத்துள்ளார்.
பாலாஜியுடன் பணியாட்கள் சக்திவேல் (40), சங்கர் (44) ஆகியோர் பொருட்களை ஏற்றிக்கொண்டு அண்ணா நகரில் இருந்து வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். செட்டிவட்டம் அருகே வரும்போது, வாணியம்பாடியில் இருந்து தும்பேரியை நோக்கி ஒரு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (19), ஆனந்தன் (60) ஆகியோர் மீது மினிலாரி மோதியது.
மோதிய வேகத்தில் மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினிலாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல், தார் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story