தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூா், மயலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலை
மன்னார்குடி தாலுகா கோட்டூர் ஒன்றியம் 72 குறிச்சி கிராமத்தில் சாலை ஒன்று உள்ளது. பிரதான சாலையான இதில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு வேலைக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், 72 குறிச்சி, கோட்டூர்.
தார் சாலை வேண்டும்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா ஆலத்தம்பாடி அருகே ஆர்.கே.கே நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ஆர்.கே.கே. நகரில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவசுப்பிரமணியன், ஆலத்தம்பாடி.
புதிய மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உச்சிமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கதொட்டி தற்போது சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. மேலும் தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாயநிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிகாக புதியநீர்த்தேக்கதொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப்புராஜ், உச்சிமேடு-சீர்காழி.
மரக்கிளைகள் அகற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் அன்னியூர் சாலையில் வாய்க்கால் கரை தெருவில் திருமியச்சூர் பிரதானசாலையில் உள்ள மரத்தில் மின்கம்பிகள் உரசி சென்றன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து மின்கம்பிகள் மீது உரசி சென்ற மரக்கிளைகளை அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story