திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள மண்ணாங்கட்டி(வயது 60) என்பவரின் பெட்டிக் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 11 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், இது தொடர்பாக மண்ணாங்கட்டியை கைது செய்து அவரிடம் இருந்து 11 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கீழையூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு 10 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் துரை என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story