அமாவாசையையொட்டி கருமாரியம்மன் கோவிலில் பூஜை
அமாவாசையையொட்டி கருமாரியம்மன் கோவிலில் பூஜை
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டனில் பிரசித்திப் பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாத அமாவாசை நாளான நேற்று காலை கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோவில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
Related Tags :
Next Story