500 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின
மன்னார்குடி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் சம்பா-தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் சம்பா-தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, காரிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. காற்றுடன் பெய்த பலத்த மழையால் மன்னார்குடி பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வடியவில்லை என்றால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நன்னிலம், கூத்தாநல்லூர்
நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நன்னிலம் அருகே பனங்குடியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் உச்சுவாடியில் மழைநீரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா-தாளடி பயிர்கள் மூழ்கின.
Related Tags :
Next Story