ரூ.7¼ கோடிக்கு மதுவிற்பனை


ரூ.7¼ கோடிக்கு மதுவிற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2022 11:07 PM IST (Updated: 2 Jan 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 223 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தகடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகும். அதன்படி புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31-ந்தேதி டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடியே 69 லட்சத்து 91 ஆயிரத்து 60-க்கு மதுபானங்கள் விற்பனையானது. நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று ரூ.3 கோடியே 63 லட்சத்து 42 ஆயிரத்து 60-க்கு  மதுபானங்கள் விற்பனையானது இதன் மூலம் 2 நாட்களில் மொத்தம் ரூ.7 கோடியே 33 லட்சத்து 33 ஆயிரத்து 120- க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 

விற்பனை குறைந்தது

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டைமுன்னிட்டு 2 நாட்களில் மொத்தம்  ரூ.8 கோடியே 61 லட்சத்து 93ஆயிரத்து 440-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருந்தது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.1 கோடியே 28 லட்சத்து 60 ஆயிரத்து 320-க்கு மதுவிற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story