நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரே நாளில் 24,594 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரே நாளில் 24,594 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா முதல் தவணை தடுப்பூசி 11,28,166 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7,74,279 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் இதுவரை நடந்த 16 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 6,52,724 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று 17-ம் கட்டமாக 496 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 24,594 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story