மகப்பேறு சிகிச்சையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாநிலத்தில் முதலிடம்


மகப்பேறு சிகிச்சையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாநிலத்தில் முதலிடம்
x
தினத்தந்தி 3 Jan 2022 12:01 AM IST (Updated: 3 Jan 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாநிலத்தில் முதலிடம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டு நாளில் 19 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 ஆண் குழந்தைகள் 13, பெண் குழந்தைகள் ஆகும். இது குறித்து இதுகுறித்து திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் டாக்டர் குமரவேல் கூறியதாவது;-

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் மட்டும் 6 ஆயிரத்து 412 குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடந்த மகப்பேறு சிகிச்சையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 முதல் 600 குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை ஆங்கில புத்தாண்டு முதல் தினத்தில் 19 குழந்தைகள் குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ்நாட்டிலேயே தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை 2-வது பரிசு பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் டாக்டர் செந்தில்குமரன், டாக்டர் வேல்முருகன் உடனிருந்தனர்.

Next Story