திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.
கொரோனா தடுப்பூசி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் மருத்துவக் குழுக்கள் மூலம் காலை 10 மணியில் இருந்து மாலை 5 வரை நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கும் 8-ந்தேதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது உடையவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 400 ஆக உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
மேலும் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். இதுகுறித்து இந்த வயதிற்குட்பட்டவர்கள் COWIN20 PORTAL மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசி மையங்களில் நேரடியாகவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story