திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் உத்தரவு
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்து 6 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவிடப் பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்து 6 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவிடப் பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.
ஆய்வு
திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நேற்று திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை பார்வையிட்டார். அங்கு துணிநூல் கழிவுகளிலிருந்து பெண்கள் தரை மிதிப்பான் தயாரிக்கும் பணியை பார்வையிட்டு பாராட்டினார். தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதான குப்பை கிடங்கையும் பார்வையிட்டார்.
பின்னர் திருவண்ணாமலை- போளூர் சாலையில் ஓட்டலில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு சங்க பிரதிநிதிகளுடனான ஆய்வு கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் திடக்கழிவுகளை சுத்திகரிப்பது, பிரித்து கொடுப்பது போன்றவை குறித்து பேசப்பட்டது. இதில் நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டல், விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர நல அலுவலர் மோகன் நன்றி கூறினார்.
6 மாதங்களுக்குள்...
முன்னதாக நீதிபதி ஜோதிமணி கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்து 6 மாதங்களுக்குள் அகற்ற ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 சதவீதம் மக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அளித்து வழங்குவது பாராட்டுக்குரியது.
பொதுமக்கள் அனைவரும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story