கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதி உதவி பெறாமல் விடுபட்டிருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
நிதி உதவி பெறாமல் விடுபட்டிருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழக அரசின் சார்பில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 1250 பேரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 973 குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் இணைய வழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இருமுறை பதிவு, சரியான ஆவணங்கள் இல்லாத 124 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 153 மனுக்கள் இறப்பு குறித்த ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலினையில் உள்ளது. இந்த நிதி உதவி பெறாமல் எவரேனும் விடுப்பட்டிருப்பின் இறப்பு சான்று, ஆதார் அட்டை, வாரிசு சான்று, வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை கொண்டு https://www.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் "வாட்ஸ் நியூ" பகுதியில் Ex-Gratia for COVID-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உதவித் தொகை பெறலாம்.
இறப்பு சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், வாரிசு சான்று ஆகியவற்றின் நகலினையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். நிதி உதவி பெறுவது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பினும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடர் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 04175-1077 மற்றும் 04175-232377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story